எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் | ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | ''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து | சின்னத்திரையில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் இல்லையே.. .. | மாடுகளை நானே குளிப்பாட்டுவேன்: அட...டா... அதுல்யா | 'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் |

ஹிந்தி நடிகையான ஊர்வசி ரவுட்லா தமிழில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். ஜே.டி. - ஜெர்ரி இப்படத்தை பிரம்மாண்ட செலவில் இயக்கி வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமூக ஊடகத்தில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் ஊர்வசி, அடிக்கடி கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை பதிவிடுவார். இப்போது சேறுகளை உடல் முழுக்க பூசிய ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ‛‛சேறு குளியல் தனக்கு பிடித்த ஒன்று. கிளியோபாட்ரோவும் இந்த குளியலை மிகவும் விரும்புவார். இது சருமத்திற்கு மிகவும் நல்லது'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை 12 லட்சத்திற்கும் அதிகமான பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.