'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

காதலில் விழுந்தேன் மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்பறவை, தெறி, தொண்டன், சில்லு கருப்பட்டி உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் சுனைனா. இவரது நண்பரும், தயாரிப்பாளருமான அபினேஷ் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
அவரது குடும்பத்தினர் மருத்துவ செலவுக்கூட பணம் இன்றி தவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு நிதி உதவி செய்து காப்பாற்றுங்கள் என்று சுனைனா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
சமூகவலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்களை நான் வெளியிட மாட்டேன். ஆனால் அவசர தேவை என்பதால் இதை வெளியிடுகிறேன். எனது நண்பர் அபினேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு தற்போது நிதி உதவி தேவைப்படுகிறது. பணம் இன்றி அவரது குடும்பத்தினர் தவிக்கிறார்கள்.
அவருடைய மேல்சிகிச்சைக்காக தேவைப்படும் நிதியை தயவு செய்து அனைவரும் கொடுத்து உதவுங்கள். நான் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதால் அதன் வலி எனக்கு தெரியும். சிறிய தொகையாக இருந்தாலும் பெரிய தொகையாக இருந்தாலும் உதவி செய்து அவருக்கு தேவையான நிதியை கொடுத்து அவரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்று கூறியிருக்கிறார். அதோடு பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரத்தையும் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அவரது கோரிக்கை ஏற்று ரசிகர்கள் பலர் தங்களால் இயன்ற தொகையை அனுப்பி வருகிறார்கள்.