என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

மலையாள திரையுலகத்தினர் அனைவராலும் 'லாலேட்டன்' என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன்லால் இன்று தனது 61வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையில் அவரை நனைய வைத்து வருகின்றனர். வழக்கமாக ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனது பிறந்தநாளை படக்குழுவினருடன் கொண்டாடுவார் மோகன்லால்.
அதேபோல இந்தமுறை தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சில நண்பர்களுடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் மிக எளிமையாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்றை மோகன்லாலின் பாரோஸ் பட உதவி இயக்குனரான சமீர் ஹம்சா என்பவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வந்த மலையாள பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், தான் தற்போது இயக்கி வரும் பாரோஸ் என்கிற படத்தின் தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்வதற்காகவும் கடந்த சில நாட்களாகவே சென்னையிலேயே தான் முகாமிட்டுள்ளார் மோகன்லால்.