பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
கலைமகன் முபாரக் ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாராகும் படம் வேலன். அறிமுக இயக்குனர் கவின் இயக்குகிறார். பிக்பாஸ் முகேன் நாயகனாகவும், மீனாக்ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். மலேசியாவை சேர்ந்த முகன் அங்கு பிரபல பாடகராகவும், மாடலாகவும் இருக்கிறார். சில மலேசிய படங்களிலும், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பெரடி, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது: குடும்பமாக இணைந்து பார்க்கும், அழகான படங்களை உருவாக்குவதே எனது குறிக்கோள். குடும்பங்களை இணைக்கும் எந்த விதமான கதைகளும் சிறப்பானதாகவே இருக்கும். இன்றைய உலகில் குடும்பங்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, நேர்மறை அம்சங்களை சொல்ல வேண்டியது நமது கடமை.
அறிமுக இயக்குநர் கவின் பிரபல இயக்குநர் சிவாவின் குழுவிலிருந்து வந்துள்ளார். அவரிடம் கற்ற வித்தை படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. மிக அழகாக படத்தினை உருவாக்கி வருகிறார். மிக உற்சாகமான இளமை துள்ளலுடன் இருக்கிறார் நடிகர் முகேன் அது அவரது நடிப்பிலும் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.
அழகான தேவதை போன்று இருக்கிறார் நடிகை மீனாக்ஷி. பிரபு அவர்களும் சூரி அவர்களும் மிகுந்த ஒத்துழைப்பினை நல்கியுள்ளார்கள். அனுபவம் வாய்ந்தவர்களுடனும், இளம் திறமைகளுடனும் இணைந்து வேலை செய்யும் இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியினை தந்துள்ளது.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் முடிந்த நிலையில், தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. படக்குழுவினர் அயராத உழைப்பினை தந்து வருகின்றனர். படத்தினை வரும் கோடை காலத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம். என்றார்.