மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி | கொரோனா சூழலிலும் 'கிளாமர்' போட்டோக்களைப் பதிவிடும் நடிகைகள் | அடுத்தடுத்து புதிய படங்களில் தனுஷ் | ரேஷ்மாவின் புதிய தொடர் அபி டெய்லர்ஸ் | 3வது குழந்தை பெற்றால் சிறை: கங்கனா அதிரடி | சினிமாவில் பிசியாகும் சிவாங்கி | சிறப்பு அனுமதியுடன் இரவு ஊரடங்கிலும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு ? | மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி | ஹிந்தி இசையமைப்பாளர் ஷ்ராவன் கொரானோவால் மரணம் |
இயக்குனர் விக்னேஷ்சிவன், நயன்தாரா ஜோடி தான் தமிழ்த் திரையுலகின் பரபரப்பான காதல் ஜோடி. கடந்த சில வருடங்களாக காதலர்களாகவே இருக்கிறார்கள். இந்த ஜோடி அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அதைப் பார்த்ததும் ரசிகர்களும் வழக்கம் போல பொறாமையில் கமெண்ட்டுகளை அள்ளித் தெளிப்பார்கள்.
இன்று காதலர் தினம் என்பதால் புகைப்படம் பதிவிடாமல் இருக்க முடியுமா?. விக்னேஷ் சிவன் ஜோடியாக புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “உன்னுடன் காதலில் இருக்கிறேன் தங்கமே, காதலர் தின வாழ்த்துகள் அன்பான நண்பர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.
“உனக்கு மட்டும் தினமும் தீபாவளி, பொங்கல்தான்யா”, “சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க”, எப்போ கல்யாணம் பண்ற ஐடியா”, என கமெண்டில் கேட்டுள்ளார்கள்.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இந்த ஜோடி காதல் ஜோடியாகவே இருக்கும் ?.