'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சென்னை, வடபழனி, பிரசாத் ஸ்டூடியோவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசைப்பணிகளை செய்து வந்தார் இசைஞானி இளையராஜா. அந்த இடத்திலிருந்து ஸ்டுடியோ நிர்வாகம், அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதுதொடர்பாக கோர்ட் வரை பிரச்னைகள் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அவ்விடத்தில் இருந்து நீங்கிய நிலையில், தற்போது கோடம்பாக்கம் பழைய எம்.எம்.தியேட்டரில் புது ஸ்டூடியோவை இளையராஜா உருவாக்கி உள்ளார். இதன் திறப்பு விழா இன்று(பிப்., 3) நடக்கிறது. வெற்றிமாறன், இளையராஜா முதல் முறையாக இணையும் புதுப்படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். இப்படத்திற்கான பாடல் ஒலிப்பதிவு இளையராஜாவின் புது ஸ்டூடியோவில் நடக்க உள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்குமார் தங்கை பவானிஸ்ரீ முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது.