திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு | நான் விஜய்யின் ரசிகை! - நடிகை குஷ்பு | சிவாஜி பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன் ! - சிவகார்த்திகேயன் | 'பார்க்கிங்' இயக்குனர் அடுத்த படம் குறித்து தகவல் இதோ! | மாளவிகா மோகனனின் தெலுங்கு அறிமுகம் தள்ளிப்போக காரணமாக இருந்த விஜய் தேவரகொண்டா! | 'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்? | 'ஜனநாயகன்' தணிக்கை தாமதம்: வழக்கு நாளை ஒத்திவைப்பு | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் |

1979ம் ஆண்டு வெளிவந்த படம் நீயா. கமல், ஸ்ரீப்ரியா நடித்திருந்தனர். இதில் பழிவாங்கும் இச்சாதாரி பாம்பு என்ற கதையில் படம் வெளிவந்தது. தற்போது நீயா 2 என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது.
இதில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். ஷபிர் இசை அமைக்கிறார், ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். எத்தன் படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இயக்குகிறார். ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரிக்கிறார். 10 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது இந்த பாம்பு படம்.
இதுபற்றி இயக்குனர் எல்.சுரேஷ் கூறியதாவது: கதைக்கு தேவைப்பட்டதால் “நீயா2” என்று பெயர் வைத்துள்ளேன். மற்றபடி நீயா படத்தின் கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இரண்டுமே பாம்பை மையமாக கொண்ட படங்கள் என்பது தான் தொடர்பு. இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது.
22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்கிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்டோம்.
படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கிறார். வித்தியாசமான வேடம், இரண்டு வித பரிமாணத்தில் கண்டிப்பாக அசத்துவார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார், மேலும் ராய்லட்சுமி , கேத்தரின் தெரேசா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலசரவணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல், சாலக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர் படமாக சுமார் ரூ.10 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது என்கிறார் இயக்குனர் எல்.சுரேஷ்.