ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்தி இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் பொங்கலன்னு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திற்காக ஒரு பாக்சிங் சண்டைக் காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அதன் படப்பிடிப்பு சுமார் 18 மணி நேரம் நடைபெற்றிருக்கிறது. நாயகன் கௌதம் கார்த்திக் துளியும் சோர்வு இல்லாமல் அந்தக் காட்சியில் நடித்தார் என படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் தெரிவித்துள்ளார்கள்.
பாக்சிங்கில் கௌதம் கார்த்திக் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர் என்பதால் அந்தக் காட்சியை எளிதாக எடுக்க முடிந்தது என்றும் படத்தின் வெளியீட்டுத் தேதியை நாளை அறிவிக்க உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
கௌதம் கார்த்திக்கின் அப்பா கார்த்திக் நாயகனாக நடிக்கும் காலத்தில் படப்பிடிப்புக்கு சரியாகவே வர மாட்டார் என்று அவர் மீது பெரும் குற்றச்சாட்டு இருந்ததுண்டு. ஆனால், அவர் மகன் கௌதம் கார்த்திக்கோ, இப்போது சின்சியராக நடித்துக் கொடுத்துள்ளார் என்று பாராட்டைப் பெற்றுள்ளார்.