Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள்

14 ஏப், 2026 - 10:49 IST
எழுத்தின் அளவு:
Dont-choose-stories-on-the-fly-Director-Kalkis-request-to-Mrunal-Thakur
Advertisement


தெலுங்கில் வெளியான 'சீதாராமம்' படத்தில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து தெலுங்கில் வெற்றி படங்களில் இடம்பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'டகாய்ட்' படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக 'கல்கி' பட இயக்குனர் நாக் அஸ்வின் கலந்து கொண்டார். அப்போது அவர் மிருணாள் தாக்கூர் குறித்து பாராட்டி பேசியதுடன் தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “மிருணாள்.. நீங்கள் உண்மையிலேயே அற்புதமானவர்.. ஆனால் சில நேரங்களில் ஏன் நீங்கள் அவ்வளவு தாக்கம் இல்லாத கதாபாத்திரங்களை செய்கின்றீர்கள் என்று எனக்கு ஆச்சரியம் ஏற்படும். நீங்கள் இன்னும் அதிக வலுவான கதாபாத்திரங்களுக்கு தகுதியானவர். அது எந்த கதாபாத்திரம் என்றாலும் கூட அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து அது வருத்தமோ அல்லது வலியோ அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதத்தில் மதுபாலா, ஸ்மிதா பாட்டில் ஆகியோரின் நீட்சியாகவே உங்களை பார்க்கிறேன். அதனால் தயவு செய்து போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள். நல்ல வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுங்கள்” என்று கூற, அவரது பேச்சில் நெகிழ்ந்து போன மிருணாள் தாக்கூர் அதை ஆமோதித்து தலையசைத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் தாக்குப்பிடிப்பாரா கிர்த்தி ஷெட்டி?தமிழில் தாக்குப்பிடிப்பாரா ... கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது கோவையில் கேபிள் டிவியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap