3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர்
ஜூன் 08, 20261
Advertisement
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த கருப்பு படம், 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தின் வசூல் 300 கோடியை தொட்டுவிட்டது. படம் வெளியான சில நாட்களில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் சூர்யா கலந்து கொண்டார். ஆனால், ஒட்டு மொத்தமாக படக்குழுவினர் இன்னமும் வெற்றி விழாவை கொண்டாடவில்லை. அதற்கான நாளுக்காக காத்திருக்கிறார்கள். விரைவில் நடக்க உள்ள அந்த விழாவில் சூர்யா, திரிஷா, இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்குபின் கிடைத்த வெற்றி என்பதால் வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், படத்திற்காக உழைத்தவர்களை அழைத்து விருந்து கொடுத்து, ஷீல்டு கொடுக்கவும் சூர்யா யோசிக்கிறாராம்.
அதேபோல் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் படமும் கமர்ஷியலாக வெ றி பெற்று 50 கோடியை நெருங்கி உள்ளது. அந்த படக்குழுவும் , ஏஜிஎஸ் நிறுவனமும் சக்சஸ் மீட்டுக்கு தயாராகி வருகிறதாம்.
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கமர்ஷியலாக படம் வெற்றியாம். லைகா நிர்வாகி தமிழ்குமரனுக்காக பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இந்த படத்தை தயாரித்து கொடுத்தார் பாண்டிராஜ். தவிர, படத்தின் வியாபாரத்தில், லாபத்தில் பங்கு என பிஸினஸ் பேசியிருக்கிறார். அந்தவகையில் பாண்டிராஜிற்கு 8 கோடி முதல் 10 கோடி வரை லாபமாம். இதனால் அவரும் ஹேப்பி. விரைவில் பரிமளா படத்தின் வெற்றி விழாவை நடத்த அவரும் யோசித்து வருகிறாராம்.

வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்காந்தாரா பட வெற்றிதான், கருப்பு படம் தயாரிக்க தூண்டி உள்ளது இந்துக்களின் தெய்வ வெறுப்பாளர்கள் பணத்திற்காக ஏன் காப்பி அடிக்க வேண்டும்