தமிழில் தாக்குப்பிடிப்பாரா கிர்த்தி ஷெட்டி?
ஏப் 14, 2026
Advertisement
தெலுங்கில் ‛உப்பன்னா" என்ற படத்தில் அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். அந்தபடம் 100 கோடி வசூல் செய்து தெலுங்கு சினிமாவில் கிர்த்தி ஷெட்டிக்கு நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்த அவர், லிங்குசாமி இயக்கிய ‛தி வாரியர்" என்ற படத்தில் ராம் பொத்தனேனிக்கு ஜோடியாக நடித்தார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான அப்படம் தோல்வி அடைந்தது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி என்ற படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. பின்னர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த வா வாத்தியார் என்ற படமும் தோல்வி அடைந்தது.
ரவி மோகன் உடன் அவர் நடித்துள்ள ‛ஜீனி" என்ற படம் கிடப்பில் கிடக்கிறது. இப்படியான நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை மலைபோல் நம்பி இருந்தார் கிர்த்தி. ஆனால் கடந்த பத்தாம் திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று மந்தமாக வசூலித்து வருகிறது. இதன் காரணமாக கிரித்தி ஷெட்டிக்கு தமிழில் அடுத்தடுத்த புதிய படங்கள் ஒப்பந்தம் ஆகுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஜீனி படம் அவருக்கு திருப்புமுனை தரலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!