
கர்ப்பத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த சமந்தா
தற்போது தனது கணவருடன் இணைந்த "மா இன்ட்டி பங்காரம்" (தமிழில் "எங்கள் தங்கம்") படத்தை தயாரித்து நடித்தார். இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. வெளியீட்டுக்கு பிந்தைய நிகழ்வில் அவர் கலந்து கொண்டபோது அவரிடம் 3 மாத கர்ப்பிணிக்கான அடையாளமும், தோற்றமும் காணப்பட்டது. இதுகுறித்து இணைய தளங்களில் தகவல்கள் வெளியானது.
இத்தகவலைத் தற்போது நடிகை சமந்தா உறுதிப்படுத்தியிருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த "மா இன்ட்டி பங்காரம்" படத்தின் சக்சஸ் மீட்டில் இத்தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசியவர், "இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்கப்போகிறேன். அதன் பிறகு நான் மீண்டும் வந்துவிடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.
இதன் மூலம் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள் (2)
கருத்து எழுதுங்கள்வாழ்க பல்லாண்டு, ஒரு நேர்மையான யதார்த்த தைரியமான பெண், இந்த திருமண வாழ்க்கை நீடித்து நிலைக்க ஆசீர்வதிக்கிறேன்
அப்பாடா இனி மக்களும் நிம்மதியாக சாப்பிடுவார்கள், உறங்குவார்கள். பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து விடும்.