பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

'மிஸ் இந்தியா' போட்டியின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்தவர் ஷாலி நிவேகாஸ், மாடல் அழகியாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தவர் 'வல்லமை தாராயோ' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து பரவலாக அறியப்பட்டார். பின்னர் 'செங்களம்' என்ற வெப் தொடரில் நடித்தார். அதன் பிறகு தங்கர் பச்சான் இயக்கத்தில் அவரது மகன் அறிமுகமான 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது 'கேம் பிளே' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
கிஷோர், சாருகேஷ், வினோத் கிஷண், சார்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்துக்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'காளிதாஸ்' படத்தைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “பொருளாதார குற்றத்தை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் புலனாய்வு த்ரில்லராக உருவாகி உள்ளது. மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.