பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

சந்தீப் கிஷன் தற்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சந்தீப் கிஷன் நடிக்கும் 33வது படம். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படம் பேண்டசி ஜார்னரில் தயாராகிறது. ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மகிதர் ரெட்டி, ராஜசேகர், அன்னபிமோஜு இணைந்து தயாரிக்கிறார்கள். உகந்தர் முனி இயக்குகிறார்.
படம் குறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை, சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற வலிமையான டேக்லைனுடன், பேண்டஸி சாகசமாக உருவாகிறது. சந்தீப் கிஷன் இந்த சோஷியல் பேண்டஸி திரில்லர் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார். இதுவரை காணாத ஒரு சக்திவாய்ந்த அவதாரத்தில் அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், சந்தீப் கிஷனின் திரை வாழ்க்கையிலேயே அதிக செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாக இருக்கும். தயாரிப்பு வடிவமைப்பு, விஷுவல் எபெக்ட்ஸ், மற்றும் கதை சொல்லல் என அனைத்து அம்சங்களிலும் பார்வையாளர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்படவுள்ளது.
பல மொழிகள் மற்றும் பல கலாசார பின்னணிகளைக் கொண்ட ரசிகர்களை சென்றடையும் வகையில், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமான பான்-இந்தியா படமாக உருவாகிறது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படமாக்கப்படவுள்ளது.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.