Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: குறைவான நாட்களில் தயாராகி நிறைவான வெற்றியைப் பதிவு செய்த “முகராசி”

22 மார், 2026 - 05:51 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Muharasi”-was-prepared-in-a-short-period-of-time-and-recorded-a-complete-success
Advertisement


அனுபவம் என்ற ஆசான் கற்றுத் தந்த பாடத்தைப் பயின்று, மக்களின் தேவை மற்றும் அவர்களது நாடித் துடிப்பறிந்து, தனக்கென ஒரு தனிப் பாணியை வகுத்து, தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு என ஒரு தனித்துவமிக்க வடிவம் தந்தவர்தான் எம் ஜி ஆர். தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் கதை என்ன? என்று கேட்டறிந்து, அது வெற்றி பெருமா? பெறாதா? என்று உடனே கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்ற எம் ஜி ஆரை வைத்து படங்கள் தயாரிக்காத தயாரிப்பு நிறுவனங்களே இல்லை எனும் அளவிற்கு பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

குறிப்பாக “ஆர் ஆர் பிக்சர்ஸ்”, “சரவணா பிலிம்ஸ்”, “சத்யா மூவீஸ்” போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடித்திருக்கும் எம் ஜி ஆர் என்ற இந்த மூன்றெழுத்து மந்திரத்தை, சரியாக பயன்படுத்திய ஒரு தயாரிப்பு நிறுவனம் என்றால் அது “தேவர் பிலிம்ஸ்” என்று உறுதியாகச் சொல்லலாம். எம் ஜி ஆரை நாயகனாக வைத்து, ஏறக்குறைய 16 திரைப்படங்கள் வரை தயாரித்திருக்கும் இந்நிறுவனத்தின் மற்றுமொரு வெற்றித் தயாரிப்புதான் “முகராசி”.

கதாசிரியர் ஜி பாலசுப்ரமணியத்தின் “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்ற நாடகத்தை தழுவியும், 1964ம் ஆண்டு வெளிவந்த “தி பிட்டிலெஸ் த்ரீ” என்ற ஆங்கில திரைப்படத்தின் ஈர்ப்பிலும் வெளிவந்த திரைப்படம்தான் இந்த “முகராசி”. படத்தின் பூஜை அன்றே படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து, அதற்கான சரியான திட்டமிடலோடு பயணித்து, படத்தை குறித்த காலத்தில் எடுத்து முடிக்கும் ஆற்றல் பெற்ற “தேவர் பிலிம்ஸ்”, எம் ஜி ஆர் போன்ற உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என வரும்போது அதன் செயல் திறன் இன்னும் பலமடங்கு உயர்ந்தே காணப்படும் என்பதற்கு ஒரு நல் உதாரணம்தான் இந்த “முகராசி” திரைப்படம்.

அதிக எண்ணிக்கையிலான எம் ஜி ஆர் திரைப்படங்கள் வெளிவந்த ஆண்டாக பார்க்கப்பட்டு வந்த 1966ம் ஆண்டு வெளிவந்த இந்த “முகராசி” திரைப்படம் வெறும் 18 நாள்களில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படமாகும். அதிலும் எம் ஜி ஆர் போன்ற உச்ச நடிகர்களை வைத்து பதினெட்டே நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது அந்நாளில் சாத்தியமற்ற ஒன்று. அதை சாதித்துக் காட்டியிருந்ததோடு நின்று விடாமல், ஒரு 100 நாள் திரைப்படமாகவும் தந்து, வெற்றி பெறச் செய்திருந்தனர் “தேவர் பிலிம்ஸ்” நிறுவனத்தினர்.

மேலும் படத்தில் எம் ஜி ஆரின் அண்ணன் கதாபாத்திரத்திற்கு நடிகர் எஸ் ஏ அசோகன், நடிகர் கே பாலாஜி ஆகியோர் பரிசீலனையில் இருந்து வந்த நிலையில், நடிகர் ஜெமினி கணேசனை அந்தக் கதாபாத்திரத்திற்கு தெரிவு செய்தவர் எம் ஜி ஆர். எம் ஜி ஆருடன் நடிகர் ஜெமினி கணேசன் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்ற ஒரு தனிச் சிறப்பும் இந்த “முகராசி” திரைப்படத்திற்கு உண்டு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி'ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் ... பிளாஷ்பேக்: உள்ளத்தை அள்ளித் தந்த 'சபாஷ் மீனா' பிளாஷ்பேக்: உள்ளத்தை அள்ளித் தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap