நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை |

கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை, காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதற்கு திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல நடிகர் திலீப், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கில் மேல்முறையீடு செய்யுமாறு பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார். திலீப் விடுதலையானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து அவதூறு பரப்பி வருகிறார்கள், அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாதிக்கப்பட்டவராகவோ, உயிர் தப்பியவராகவோ இல்லாமல், ஒரு சாதாரண மனிதராக என்னை வாழ விடுங்கள். நான் செய்த தவறு என்னவென்றால், சம்பவம் நடந்தவுடன் போலீசில் புகார் அளித்ததுதான். நடந்தது நம் விதி என்று நினைத்துக்கொண்டு நான் மவுனமாக, எதுவும் நடக்காததுபோல் இருந்திருக்க வேண்டும்.
பின்னாளில் வீடியோ வெளியாகி, ஏன் புகார் செய்யவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பினால் நான் தற்கொலை செய்திருக்க வேண்டும். இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளி என் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டது என் கவனத்துக்கு வந்தது. சம்பவத்தின்போது என்னை வீடியோ எடுத்தது அவர்தான் என்பதையும் அவர் சொல்லி இருக்க வேண்டும். இதுபோல் குற்றம்சாட்டி, ஆன்லைனில் வெளியிடுபவர்களோ அல்லது அவர்களுடைய உறவினர்களோ இத்தகைய சூழ்நிலையை தங்களது வாழ்நாளில் சந்திக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




