சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? |

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளியான பேய் சீரிஸ் படமான காஞ்சனா இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. தற்போது காஞ்னா 4 உருவாகி வருகிறது. இதை கோல்ட் மைன்ஸ் நிறுவன தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா பதேகி, வில்லன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எப் ராமசந்திரா ராஜூ ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது லாரன்ஸ் நடிக்கும் மற்றொரு படமான பென்ஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளதால் காஞ்சனா 4ம் பாகத்தின் படப்பிடிப்பிற்கு இடைவெளிவிட்டுள்ளனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடைபெற்றது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் துவங்க உள்ளது.