ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

2006ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ. அதன் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் நின்று விடவே அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாதபடி இருக்கிறார்.
இணையத்தில் வெளியான இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக நடித்த ‛இறுகப்பற்று' படத்தில் சம்பளம் உள்ளிட்ட பிரச்னை காரணமாக அவர் மனஅழுத்தம் ஆனதாகவும், அதனால் இப்படி ஆகிவிட்டதாகவும் சிலர் அவதூறு பரப்பினர். இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் ஸ்ரீயின் உடல் நலம் குறித்து நாங்கள் உண்மையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட நாங்களும் அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம்.
அதைச்சுற்றி நிறைய ஊகங்கள் வெளியாவது துரதிர்ஷ்டவசமானது. நடிகர் ஸ்ரீயை தொடர்புகொண்டு, அவரை நல்ல உடல்நலத்துடன் மீட்டு கொண்டுவருவது தான் எங்களின் முதன்மையான நோக்கம். அதற்கு யாரேனும் உதவிகரமாக இருந்தால் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.