தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சினிமா உலகில் கிசுகிசுக்களில் அதிகம் இடம் பெறுவது காதல் கிசுகிசுக்களாகத்தான் இருக்கும். அப்படியான கிசுகிசு வராத நடிகர்கள், நடிகைகள் இருக்கவே முடியாது. அப்படி எத்தனையோ கிசுகிசுக்கள் வந்தும் திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வரும் நடிகர்களும் இருப்பது ஆச்சரியம்தான்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 40 வயதைக் கடந்த இரண்டு நடிகர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். சிலம்பரசன், விஷால் ஆகிய இருவர் பற்றியும் நிறைய கிசுகிசுக்கள் வந்துள்ளன. சிலம்பரசன் 42 வயதையும், விஷால் 47 வயதையும் கடந்துள்ளனர். இவர்களில் விஷாலுக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால், திருமணம் நின்றுவிட்டது.
அதுபோலவே நடிகையரில் த்ரிஷா 42 வயதைக் கடக்க உள்ளார். அவருக்கும் திருமண நிச்சயம் நடந்து பின்னர் திருமணம் நின்றுவிட்டது. நடிகை அனுஷ்காவும் 43 வயதை கடந்து இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி' நடிகர் பிரபாஸ், 45 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். நடிகை அனுஷ்கா, கிரித்தி சனோன் ஆகியோருடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தது. கடந்த சில நாட்களாக தொழிலதிபர் ஒருவரது மகளை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றை பிரபாஸ் தரப்பு மறுத்துள்ளது.
திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாதித்த பின்பும், மேலே சொன்னவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.