நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கன்னடத்தில் இருந்து வந்து இங்கு சாதனை படைத்தவர் சரோஜாதேவி. கன்னடத்து பைங்கிளி என்று அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அவருக்கு முன்பே கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து சாதித்தவர் கன்னடத்து பசுங்கிளி எம்.வி.ராஜம்மா.
சரோஜா தேவி முதல் இன்றைய ராஷ்மிகா மந்தனா வரை கன்னட சினிமா, தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகிகளை வாரி வழங்கி வந்திருக்கிறது. அவர்களில் எத்தனையோ பேர் இங்கே புகழையும் பொருளையும் ஈட்டியிருந்தாலும், முதன் முதலில் கணக்கைத் தொடங்கியவர் எம்.வி.ராஜம்மா.
'யயாதி' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1940ல் வெளியான 'உத்தமபுத்திரன்' படத்தில் பி.யு.சின்னப்பா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். கன்னடத்தை விட தமிழிலேயே அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1943ம் ஆண்டு 'ராதா ரமணா' என்ற கன்னட படத்தை தயாரித்தார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் தயாரிப்பாளர் ஆனார். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தார். 1999ம் ஆண்டு காலமானார்.
இன்று அவரது 104வது பிறந்த நாள்.