25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் தனி இசை அமைப்பாளராக அறிமுகமானபோது தனது அண்ணனின் இசை குறிப்புகளிலேயே இசை அமைத்தார். பின்னர் அவர் தன்னிச்சையாக இசை அமைத்தபோதும் அது இளையராஜாவின் பாடல்கள் என்றே ரசிகர்கள் நம்பினார்கள். பல படங்களுக்கு அவர் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதும் அது இளையராஜா பாடல் என்றே நம்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வந்த படம்தான் 'வாழ்வே மாயம்'. தெலுங்கில் 'பிரேமாபிஷேகம்' என்ற பெயரில் வெளிவந்து ஹிட்டான படத்தை கே.பாலாஜி தமிழில் 'வாழ்வே மாயம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கியிருந்தார். தமிழில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். அக்னினேனி நாகேஸ்வரராவ் நடித்த கேரக்டரில் கமல் நடித்தார்.
'பிரேமாபிஷகம்' படத்திற்கு சக்ரவர்த்தி இசை அமைத்திருந்தார். தெலுங்கில் பாடல்கள் ஹிட்டானாலும். காலத்தை வென்ற சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் 'வாழ்வே மாயம்' படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்ற சூப்பர் ஹிட் பாடல் ஆனது. காட்சியின் சூழலுக்கு ஏற்ப சக்ரவர்த்தி போட்டிருந்த மெட்டை தழுவி அதில் மாற்றங்களை செய்து பாடல்களுக்கு புதிய இசையை கொடுத்திருந்தார் கங்கை அமரன்.
'தேவி ஸ்ரீதேவி, ஏ ராஜாவே, நீலவான ஓடையில், மழைக்கால மேகம், வந்தனம், வாழ்வே மாயம்...' என்று அத்தனை பாடல்களும் இன்றைக்கும் கேட்கும்போது மெய்மறக்க வைக்கும் பாடல்களாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பார்த்து, இளையராஜாதான் இசை என்று பல காலம் பந்தயம் கட்டியவர்களெல்லாம் உண்டு. ஒரு பொது நிகழ்ச்சியில் வாழ்வே மாயம் பாடல்கள் என்னுடையதல்ல, தம்பியுடையது என்று இளையராஜா சொன்ன பிறகே இந்த சந்தேகம் முடிவுக்கு வந்தது.