மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
‛ஆர். ஆர். ஆர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கவுள்ளார். கடந்த வருடத்தில் இருந்து இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளனர். சமீபத்தில் இதற்கான டெஸ்ட் லுக் படப்பிடிப்பிற்காக பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்திற்கு கடந்த வாரத்தில் வந்திருந்தார். அப்போது அவரின் சம்பளம் தொகை குறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பிரியங்கா சோப்ரா, பாலிவுட் மற்றும் சில ஆங்கில படங்களில் நடித்துள்ளதால் வெளிநாடுகளிலும் அவர் புகழ்பெற்ற நடிகை என்பதால் அவர் ரூ. 30 கோடி சம்பள தொகை கேட்டுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வந்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.