வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
தமிழ் சினிமாவில் 'சேது' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. திரையுலகில் 25 வருடங்களைக் கடந்த அவருக்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அத்துடன் அவர் இயக்கி பொங்கலுக்கு வெளியாக உள்ள 'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சிலரைத் தவிர பலர் விழாவுக்கு வருகை தரவில்லை. பாலா இயக்கிய முதல் படமான 'சேது' படத்தின் நாயகன் விக்ரம் வரவில்லை. இருந்தாலும் சூர்யா, அவரது அப்பா சிவகுமார் ஆகியோர் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். இத்தனைக்கும் இந்த 'வணங்கான்' படத்தில்தான் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
பாலாவின் இயக்கத்தில் நடித்த மற்ற நடிகர்களான விஷால், ஆர்யா, அதர்வா மற்றும் நடிகைகள் யாரும் வரவில்லை. ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே வந்தனர். பாலாவின் இயக்கத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.