குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' படம் அக்.31ல் தீபாவளிக்கு வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் கூறுகையில், ''இந்த படத்திற்காக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் உண்மையான துப்பாக்கிகளை பயன்படுத்தினோம். சினிமாவில் பயன்படுத்தும் துப்பாக்கியை விட அது எளிதாக இருந்தது. படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்காக 80 கிலோ வரை எடையை கூட்டி, குறைத்தேன். அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படம் 80 சதவீதம் முடிந்துவிட்டது'' என்றார்.
விஜய்
நடிகர் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கப்போவதாக பலரும் சொல்கிறார்கள், அதுப்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''சினிமாவில் சாதித்த ஒவ்வொருவருக்கும் ஒரு பயணம் உண்டு. அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு தங்களை எப்படி மாற்றிக்கொண்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். சினிமா பின்புலத்தில் இருந்து நடிகர் விஜய் வந்தாலும், தன்னை மாற்றிக்கொண்ட அவரது பயணத்தையும், இடத்தையும் யாராலையும் கைப்பற்ற முடியாது. அவர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படமே கடைசி படம் என சொல்லியுள்ளார். சினிமாவை விட்டு வேறொரு பொறுப்புக்கு சென்றாலும், அவரது இடம் அப்படியேதான் இருக்கும்'' என சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.