10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்து வரும் இந்த படத்தில் சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார், பிரசன்னா இணைந்து நடித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இதுபோன்ற தவறான வேலைகளில் யாரும் ஈடுபடாதீர்கள் என்று ஒட்டுமொத்த பட குழுவுக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, செக்யூரிட்டியை பலப்படுத்தி உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வரும் ஆதிக் ரவிச்சந்திரன் இன்னும் ஒரே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லியை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்.