பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் மிகக் குறைவான வரவேற்பே கிடைத்தது. 500 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையைப் புரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வசூலும், வரவேற்பும் குறைந்தது திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
'இந்தியன் 2' படம் உருவாகும் போதே 'இந்தியன் 3' படத்திற்கான படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இரண்டாம் பாகத்தை விடவும் மூன்றாம் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும் என 'இந்தியன் 2' வெளியீட்டிற்கு முன்பே கமல்ஹாசன் பேசியிருந்தார்.
'இந்தியன் 3' படத்தை மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியின் 'தக் லைப்' படத்திற்குப் பின்னர் வெளியிடுவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது 'இந்தியன் 3' படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிடும் முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மையான தகவலா என்பது தெரியவில்லை. தியேட்டர்களில் வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்காமல் ஓடிடியில் வெளியிடுவதே சிறந்த முடிவுதான் என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.