பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
ஜி.பி.எஸ் கிரியேஷன் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிக்கும் படம் 'பேபி அண்ட் பேபி'. ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்குகிறார். நாளைய தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாக மீண்டும் திரையில் களமிறங்கியுள்ளார்.
விஜய்க்கும், கீர்த்தனாவுக்கும் 'நாளைய தீர்ப்பு' தான் முதல் படம். அதன்பிறகு கீர்த்தனா சூரியன் சந்திரன், பிரபி பிரமாணம், பவித்ரா, தாய் தங்கை பாசம், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் குணசித்ர வேடத்தில் நடித்தார். சின்னத்திரை தொடர்களில் நடித்தார். தற்போது பூவா தலையா தொடரில் நடித்து வருகிறர். கீர்த்தனா கடைசியாக 2007ம் ஆண்டு 'இப்படிக்கு என் காதல்' படத்தில் நடித்தார். தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரதாப் கூறும்போது “தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான பேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறோம்” என்றார்.