சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

பிற மொழிகளை ஒப்பிடும்போது தமிழில் வெப் தொடர்கள் வெளியாவது மிகவும் குறைவே. இந்த நிலையில் 'ஹார்ட் பீட்' என்ற புதிய வெப் தொடர் தமிழில் தயாராகி உள்ளது. இந்த தொடர் வருகிற மார்ச் 8ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இந்த தொடர் கொரியன் மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஹார்ட் பீட்' தொடரின் தழுவல் என்றும் கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க மருத்துவமனை பின்னணியில் உருவாகும் இந்த தொடர், மருத்துவமனையில் பணியாற்றும், டாக்டர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள், அவர்களுடன் நோயாளிக,ள் அவர்களின் உறவினர்கள் ஆகியோருக்கு இடையிலான உணர்வுபூர்வமான விஷயங்களை சித்தரிக்கிறது.
கதையின் நாயகியாக தீபா பாலு நடிக்கிறார், தலைமை டாக்டராக அனுமோல் நடிக்கிறார். இவர்கள் தவிர யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர். டெலி பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைத்திருக்கிறார்.




