சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம் | நான் இறந்த பிறகும் என் பேர் சொல்லும் படம் : கருணாஸ் நெகிழ்ச்சி | ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே | சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி | சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் : இளையராஜாவுடன் இணைந்து தொடக்கம் | ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு |
“தமிழ்ப் படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா” உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளவர் சசிகாந்த். அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'டெஸ்ட்'. இப்படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற படப்பிடிப்புடன் அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் நயன்தாரா. இது குறித்து, “எனக்கு அதிகமாகத் தேவைப்படும் போது எனது வாழ்வில் நீ வந்ததற்கு நன்றி… நீயாக இருப்பதை நான் மிஸ் செய்யப் போகிறேன்… 'குமுதா'வுக்காக நன்றி. இயக்குனர் சசிகாந்த்… குமுதாவின் பெரிய வலிமையாக இருந்ததற்கு நன்றி. மாதவன், சித்தார்த்... முன்னுதாரணமாக இருந்ததற்கு நன்றி. எங்கள் அன்பின் உழைப்பைக் காண நீங்கள் அனைவரும் காத்திருக்க முடியாது - டெஸ்ட்” என இப்படம் குறித்து உணர்வுபூர்வமாய் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.