குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ |
இயக்குனர் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக, 2.O படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர் தனுஷ், உதயநிதி ஆகியோருடன் ஒருசில படங்களில் நடித்த எமி ஜாக்சன், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணமாகி லண்டனில் செட்டில் ஆனார். இந்த நிலையில் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய் இயக்கி வரும் அச்சம் என்பது இல்லையே படத்திலேயே ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.
தனது முதல் கணவரை விட்டு பிரிந்து தற்போதைய புதிய பாய் பிரண்டுடன் உற்சாகமாக பொழுதுபோக்கி வரும் எமி ஜாக்சன் அவ்வப்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு விவசாய நிலத்தில் பூசணிக்காயை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எமி ஜாக்சன் அவற்றை தள்ளுவண்டியில் சேகரிக்கும்போது தனது மகனையும் சேர்த்து உட்கார வைத்து தள்ளிவருவது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.