10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் இயக்குனர் ஆனவர் அட்லீ. அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இயக்கியவர் தனது ஐந்தாவது படமாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக அவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடத்தில் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அட்லீ அளித்த ஒரு பேட்டியில், ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறி உள்ளார். எப்போதுமே முதல் பாகத்தோடு முடிந்து விடும் கதைகளைதான் நான் தேர்வு செய்து படமாக்குவேன். ஆனால் இந்த ஜவான் படத்தை மட்டும் இரண்டு பாகம் இயக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அதனால் சரியான சந்தர்ப்பம் அமையும்போது ஷாருக்கானை வைத்து ஜவான் இரண்டாம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார்.