மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

நடிகர் விஜய் விரைவில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வரும் சமூக பணிகள் குறித்து அனைவரிடத்திலும் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு பெண் நிர்வாகி, தன்னை விஜய் ரசிகை என்று சொல்லி பேச தொடங்கிய போது, ‛‛இனிமேல் எப்போதும் தலைவரின் பெயரை சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்'' என்று மைக்கில் கூறி இருக்கிறார். அதையடுத்து அங்கு பேசியவர்கள் அனைவருமே விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள்.