இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நவீன், பல நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குரலில் பேசி மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதனைதொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாவம் கணேசன்' தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த தொடரானது சென்ற வருடம் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து நடிப்பதற்கான வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த நவீனுக்கு விரைவில் வெளியாகவுள்ள 'நீ நான் காதல்' என்ற தொடரில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தெலுங்கு சீரியலான 'நுவ்வு நேனு ப்ரேமா' தொடரின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பாவம் கணேசன் தொடரில் பாசிட்டிவ் ரோலில் அப்பாவியாக நடித்த நவீன் இந்த சீரியலில் வில்லனாக எப்படி நடிப்பார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.