ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மணிகண்டன் இயக்கிய 'காக்க முட்டை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் மகன்களாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கதை நாயகர்களாக நடித்து வரும் படம் புதுவேதம். இவர்களுடன் சஞ்சனா, சிசர் மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள், இமான் அண்ணாச்சி வில்லனாக நடிக்கிறார். ரவி தேவேந்திரன் இசை அமைக்கிறார்.
படத்தை ராசா விக்ரம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: சென்னையை சுற்றி குட்டி மலைகள் போன்று குப்பை மேடுகள் இருக்கிறது. இந்த மேடுகள் பற்றியும், அதையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்பவர்கள் பற்றியும் பொது மக்களுக்கு தெரியாது. பெற்றோர்களால் கைவிடப்படும் சிறுவர்கள் இந்த குப்பை மேட்டை நம்பி வாழ்க்கிறார்கள். அங்கேயே தங்கி இருக்கிறார்கள். அவர்களை சில சமூக விரோத கும்பல்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்த சிறுவர்கள் ஏதோ ஒரு வழியில் செத்து போகிறார்கள். அல்லது கிரிமினல்களாக மாறுகிறார்கள். இந்த பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.