ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த சித்தி இத்னானி, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் அவர் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பரபரப்பை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் நடித்தார். கடைசியாக 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்தார். சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் ஜோடியாக 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் சித்தி திடீரென சமூக சேவையில் இறங்கி உள்ளார். மும்பையில் உள்ள லிட்டில் ஏஞ்சல் என்கிற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று பரிசுகள் வழங்கிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ''நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்கக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் நேரம். லிட்டில் ஏஞ்சல்ஸில் உள்ள மனநலம் குன்றிய குழந்தைகளுடன் மதிய நேரத்தை செலவிட்டேன். அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை விலைமதிப்பில்லாதது” என்று பதிவிட்டுள்ளார்.