டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்தீப் கிஷன். தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் தெலுங்கில் பிசியான நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மைக்கேல். இதனை தமிழ் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருந்தார். தமிழ், தெலுங்கில் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது.
இந்த படம் வெளியான 20 நாளிலேயே ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் விதிமுறைகளின்படி ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த விதிமுறையை மீறிவிட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளனர்.
தற்போது இரண்டாவது ரவுண்டாக தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தை தொடர்ந்து திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கம் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு விரைவில் நடக்க உள்ள சங்கத்தின் செயற்குழுவில் இதுபற்றி பேசி மைக்கேல் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நாயகன் ஆகியோரின் படங்களுக்கு வருங்காலங்களில் ஒத்துழைப்பு தரலாமா வேண்டாம் என்பதை பற்றியும் பேச உள்ளனராம்.