அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ‛3', கவுதம் கார்த்திக் நடித்த ‛வை ராஜா வை' போன்ற படங்களை இயக்கியவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி. 18 ஆண்டுகளுக்குப் பிறகு தனுசை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு திரைப்படம் இயக்குவதில் தனது ஆர்வத்தை திருப்பி இருக்கிறார். அந்த வகையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி விஷ்ணு விஷால், விக்ராந்தை வைத்து ‛லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா. ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கான கம்போசிங்கை ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிவிட்டதை தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. இப்படியான நிலையில் தனது மகன்களான லிங்கா, யாத்ராவுடன் தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினி, தற்போது தனது இளைய மகன் லிங்காவை பாசத்துடன் தான் கட்டி அணைத்துள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.