அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் சற்று வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்பதும் இதுவரை வெளியான தகவல். அவருக்கு தற்போது 70 வயது ஆகிவிட்டதால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவே இடம்பெறும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆச்சரியப்படும் விதமாக இந்தப்படத்தில் மொத்தம் ஏழு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றும் ஸ்டண்ட் சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்த படத்தில் மாஸான ரகளையான 7 சண்டை காட்சிகள் இருக்கின்றன என்றும் அவை அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன என்றும் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றும் ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கப்போகிறது என்று சொல்லலாம்..