
வசந்த் ரவியின் வெப்பன்
இந்த படத்தை மில்லியன் ஸ்டூடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கிறார், ஏ.குகன் சென்னியப்பன் இயக்குகிறார். இவர் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடித்த "வெள்ளை ராஜா இணையத் தொடரை இயக்கி இருந்தார். "சவாரி" என்ற சைக்கோ த்ரில்லர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த படத்தில் வசந்த் ரவியுடன் சத்யராஜ் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பென்ஸ்- ஆக்ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசங்களில் நடைபெற இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!