புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சாருஹாசன் கதை நாயகனாக நடித்த 'தாதா87' படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்கி வரும் படம் பவுடர். இதில் நிகில் முருகன், வித்யா பிரதீப், அனித்ரா நாயர், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் விஜய்ஸ்ரீயும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி விஜய்ஸ்ரீ கூறியதாவது: அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ முகங்கள் தொலைகிறது.
ஒரு இரவில் நடக்கும் இந்த கதை. நமது வாழ்க்கையில் தினம்தோறும் நாம் கடந்து சென்ற நினைவுகளை ஞாபகப்படுத்தும். அதே போல ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழே பணிபுரிபவர்களை சரிசமமாக கருத வேண்டும் என்கிற கருத்தையும் பதிவு செய்யும். ஒரு மேக்அப் மேன், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு தந்தை மகள் இந்த நால்வரும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் என்ன ஆகிறது, என்ன தீர்வு கிடைக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லும் படம் தான் பவுடர். இந்த விஷயங்கள் முதல் பாகமாக உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். என்றார்.