ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் அண்ணன் தம்பியாக இரண்டு வேடங்களில் எதிரும் புதிருமாக நடித்துள்ள நானே வருவேன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே தனுஷ் படம் திரைக்கு வருகிறது. தனுசுடன் ஜெர்மன் நடிகை எல்லி அவ்ரம், இந்துஜா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறார் செல்வராகவன். அவர் நடித்துள்ள சோமராஜன் என்ற கேரக்டர் கதைக்கு திருப்புமுனை கொடுக்கும் ஒரு கதாபாத்திரமாக அமைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது.




