2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

வித்யா பிரதீப், ரிஷி ரித்விக் நடிப்பில் உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் 'திரும்பிப்பார்'. இப்ராஹிம் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜ்குமார், டேனியல், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவ்குரு இசையமைத்துள்ளார். சக்திபிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படம் பற்றி இயக்குனர் இப்ராஹிம் கூறியதாவது: பல நூற்றாண்டுகளாக போரில் எதிரிகளை தோற்கடிக்கப் பயன்படுத்தப்படும் 'நிழல் நடை' என்ற உத்தியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் வித்யா பிரதீப் முதன் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். ரிஸ்க்கான காட்சிகளில்கூட டூப் வைத்துக் கொள்ளாமல் துணிச்சலுடன் நடித்துள்ளார். இது அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.
சைவம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வித்யா பிரதீப் அதன்பிறகு பசங்க 2, அதிபர், அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம், கசட தபற, எண்ணித் துணிக படங்களில் நடித்தார். தற்போது ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், பவுடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். பவுடர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் வித்யா, இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.