2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? | கமல்ஹாசன் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்குதா? இல்லையா? |

தமிழ் சினிமாவில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரஜினி ,கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அவர்  இசை அமைத்திருக்கிறார். சமீபகாலமாக தேவா திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது பின்னணி பாடி வருகிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பல படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக பக்தி பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் தேவா, தற்போது ‛கந்த முகமே' என்ற பெயரில் ஒரு முருகன் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற இசையமைப்பாளர் தேவா அங்கு மீடியாக்களை சந்தித்தார். அப்போது, திருச்செந்தூர் முருக பெருமானுக்காக கந்த முகமே என்ற பெயரில் ஆல்பம் ஒன்றே வெளியிட்டுள்ளேன். இந்த ஆல்பம்  மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கே வழங்கப்போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் தேவா.