''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரபல ஜவுளிக்கடை அதிபர் அருள் சரவணன் நடித்துள்ள படம் ‛தி லெஜண்ட்'. இந்த படத்தை ஜேடி - ஜெர்ரி இயக்கி உள்ளனர். படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகியுள்ளதால், படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 'தி லெஜண்ட்' திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு 1,262 இணையதளங்களுக்கும், இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.