தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நடிகர் விக்ரம் ஏகப்பட்ட கெட்டப்புகளில் நடித்து முடித்துள்ள படம் 'கோப்ரா'. 'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர் .
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
இப்படம் ஆகஸ்ட் 11 -ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைவெளியீட்டு விழாவில் விக்ரம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்ரமும் இதில் பங்கேற்க உள்ளார். இன்று அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஒரு நாள் ஓய்வெடுத்துவிட்டு திங்கள் அன்று பட விழாவில் பங்கேற்க உள்ளார்.