எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி வெளிவந்த அன்னக்கிளி படம் மூலம் ஆரம்பமான இளையராஜா என்ற இசை மேதையின் இசைப் பயணம் 46 ஆண்டுகளைக் கடந்தும் நம்மை கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில் தான் இந்த 46 ஆண்டுகள், ஆனால், இப்படிப்பட்ட இசை மேதைகள் பிறந்ததிலிருந்தே மேதைகள் என அவருடன் பயணித்த பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
76ம் ஆண்டில் தன் பெயரிலான அதிகாரப்பூர்வ இசைப்பயணத்தை ஆரம்பித்த இளையராஜாவுக்கு இன்று 79வது பிறந்த நாள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம், ஏராளம்.
எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா. உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
கொரோனா காலங்களில் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்களுக்கு நிச்சயம் இவரின் பாடல்களும், இசையும் மக்களை தாலாட்ட வைத்திருக்கும். இசை தெரிந்தவர்களும், ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் இளையராஜா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுக்கும் அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://cinema.dinamalar.com/ilayaraja/