நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! | அருண் - அர்ச்சனா காதலை கன்பார்ம் செய்த புகைப்படம்! | 'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை! | நலமாக இருக்கிறேன்: ஸ்ருதிஹாசன் தகவல் |
யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் விக்னேஷ் காந்த். அதன் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். கார்த்தி நடித்த 'தேவ்', ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு', ரியோ நடித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ்காந்த் "நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. திருமணத்துக்கு அனைவரையும் அழைப்பேன். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
மணப்பெண் யார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. நட்பு வட்டாரத்தில் விசாரித்த வகையில் உறவுக்கார பெண் என்று தெரிகிறது.