இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கணவன் மனைவியாக நடித்து பிரபலமான ஜோடி வீஜே தீபிகா - சரவண விக்ரம். இவர்களது கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனில் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோடு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. திரையை தாண்டி நிஜ வாழ்க்கையிலுமே இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வரவே, தீபிகாவும் சரவணனும் காதலிப்பதாக செய்திகளும் பரவியது. இதற்கு பலமுறை 'இல்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்' என இருவருமே சேர்ந்து விளக்கமளித்துள்ளனர். எனினும், இன்றளவும் நெருங்கிய நட்பிலேயே பயணித்து வருகின்றனர். இதைபார்த்து விட்டு பலரும் வதந்தியாக இருந்தாலுமே இருவரும் நல்ல ஜோடி தான் என வாழ்த்துகளும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திருமண கோலத்தில் வீஜே தீபிகாவும் - சரவணனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் இருவரது ஜோடி பொருத்தமும் படு சூப்பர். இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் 'சொல்லாம கொள்ளாம திருமணம் செஞ்சிட்டாங்களா?' என அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அது வெறும் போட்டோஷூட்டுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது என்பது ரசிகர்களுக்கு லேட்டாக தான் தெரிய வந்தது.