நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்த 'பீஸ்ட்' படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. முதல் நாளிலேயே பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கும் சேர்த்து படம் ஹவுஸ்புல் ஆனது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படம் விமர்சனங்களையும் மீறி வசூலித்துவிடும் என திரையுலகில் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு நாளிலேயே இப்படம் 100 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் 60 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 10 கோடி, கர்நாடகாவில் 10 கோடி, கேரளாவில் 8 கோடி, வட இந்தியாவில் 2 கோடி, வெளிநாடுகளில் 35 கோடி என இப்படம் மொத்தமாக 125 கோடி வரை வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களும் விடுமுறை என்பதால் படம் எளிதில் 200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது என்றே தெரிகிறது. திங்கள் கிழமை முதல்தான் இப்படத்திற்கான வசூல் இறங்குகுமாக இருக்கும் என்கிறார்கள். 'கேஜிஎப் 2' படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருப்பதால் அந்தப் படம் மீது ரசிகர்களின் பார்வை திரும்பிவிட்டதே 'பீஸ்ட்' படத்திற்கான வசூல் குறைய காரணமாக அமையுமாம்.