‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ராஜமவுலியின் இயக்கத்தில் பாகுபலி படத்தை தொடர்ந்து ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ராஜமவுலி என்றாலே பிரமாண்டம் தான் என்கிற நிலையில் அவரது ஒவ்வொரு படமும் இனி இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்க வைத்து விட்டது. அதேசமயம் அவர் எளிமையான படங்களையும் இயக்க விரும்புபவர் என்பது சமீபத்திய அவரது பேட்டியில் வெளிப்பட்டது.
அந்த வகையில் அவரிடம் நீங்கள் பார்த்து ரசித்த படங்களில் நீங்களே இயக்க விரும்பிய படம் எது என்பது குறித்து கேட்கப்பட்டபோது, திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் நான் இயக்க விரும்பினேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி. இதுபற்றி அவர் கூறியபோது, த்ரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட் பயங்கரமாக எழுதப்பட்டுள்ளது என்றும் புத்திசாலித்தனமான, எளிமையான, உணர்வுபூர்வமான அதேசமயம் படு திரில்லிங்கான கலவையாக உருவாகியுள்ள இந்தப்படம் பார்வையாளர்களை எல்லா வகையிலும் திருப்திப்படுத்தியது. இதுபோன்ற படத்தை இயக்குவதற்கு தான் விரும்பியதாகவும் கூறினார் ராஜமவுலி..